திருப்பூரில் மக்களுக்குப் பயன்பாடற்ற இடத்தில் தார் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்த சமூக ஆர்வலரைத் திமுக பேரூராட்சித் தலைவர். பழனிசாமி கார் ஏற்றிக் கொன்றதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மரணம் தான் பரிசளிக்கப்படுமா? ‘திமுகக்காரன்’ எனும் ஒற்றை அடையாளமும், பதவி அதிகாரமும் இருந்தால் ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற குற்றங்கள் வெளிவரும்போது கண்துடைப்புக்காகத் தான் கைது நடக்கிறதே தவிர, கன்னித்தீவு தொடரைப் போலத் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றன.
இப்படி நான்காண்டுகளாய் மக்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டு, அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போரின் உயிரையும் பறித்துவிட்டு, ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்று பெருமை பேச திமுகவினர் நாண வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.