தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக உழைப்போர் உரிமை இயக்க;ம் அறிவிவித்துள்ளது.
சென்னை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்களை குப்பையாக அமைச்சர் சேகர்பாபு கருதுவதாகவும், அவரை தமிழக முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.
வீட்டில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை கைது செய்வது எந்த சட்டத்தில் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய அவர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.