நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கடந்த 9-ம் தேதி சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றார். இந்த நிலையில், சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நேபாள மக்களின் முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.