மத்தியப்பிரதேசத்தில் செயல்படும் வாகனப் பழுதுபார்க்கும் மையத்தில், முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே வேலைச் செய்கின்றனர்.
இந்தூரில், முதல் முறையாக, சமான் கூட்டுறவு சங்கத்தால் பெண் மெக்கானிக்குகளால் இயக்கப்படும் பைச் சர்வீஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட யந்திரிகா என்ற இந்த இருசக்கர வாகனப் பழுது நீக்கும் மையத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
சகப் பெண்களுடன் பணியாற்றுவது ஆதரவான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் அங்கு பணியாற்றும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைத்து விதமான இருசக்கர வாகனங்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்து உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அசத்தி வருகின்றனர்.
பெண்கள் அனைத்துத் துறையிலும் கால்பதித்துச் சாதிப்பதற்கு இதுவும் ஒரு சான்று என்று கூறினால் அது மிகையாகாது.
2022-ம் ஆண்டில் இந்தப் பழுது பார்க்கும் மையம் தொடங்கப்பட்டாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.