உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக நில அளவை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், வைகையாற்றில் மிதந்தன.
இதுகுறித்து வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆற்றில் மிதந்தவை, பூவந்தி பகுதியில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் தாசில்தாராகப் பணியாற்றி வந்த விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தாலுகா அலுவலக நில அளவை அதிகாரி முத்துக்குமாரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.