வங்கக் கடலில் புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.