பஹல்காம் தீவிராத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத்துறைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் தீவிராத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது.
இதனால் சுற்றுலாத்துறைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறையை நம்பியுள்ள 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு, சுற்றுலா பயணிகளின் வருகை 72 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.