திருவண்ணாமலையில் நடைபெறும் தேவ ஆகம ஆன்மீகக் கலாச்சார மாநாட்டில் ஆயிரத்து 8 சிவாச்சாரியர்கள் பங்கேற்றுச் சிவ பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
அண்ணாமலையார்க் கோயிலின் கிரிவலப்பாதையில் உள்ள சந்தைமேடு பகுதியில் இரண்டு நாட்கள் வேத ஆகம ஆன்மீகக் கலாச்சார மாநாடு நடைபெறுகிறது.
இதில் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர விஜயேந்திரச் சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைத் தந்த ஆயிரத்து 8 சிவாச்சாரியார்கள் சிவபூஜைச் செய்தனர். லிங்கம் வைத்து மலர் தூவி, கற்பூரத் தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தினர்.