தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கேஷ் கவுண்டரில் புகுந்து பணத்தை திருடி சென்ற சிறுவனின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாமாபாத் அருகே போதன் நகரில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியில், வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், கேஷ் கவுண்டரில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணக்கட்டை எடுத்துக் கொண்டு மெதுவாக வெளியேறி விட்டான்.
சிசிடிவியில் பதிவான வீடியோ அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.