தேசிய அளவில் வாக்கு திருட்டுக்கு எதிராகப் பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர், தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான நடைமுறைக்காக ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் என்றும் இது அவர் தொடர்ந்து பேசி வரும் வாக்கு திருட்டு என்ற குற்றச்சாட்டை விட மோசமான குற்றம் என்றும் சாடினார்.