டெல்லியில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள், நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இன்று மாநிலத்தில் உள்ள பிரபல தாஹ் ஹோட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஹோட்டலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் அவை புரளி எனத் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.