தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனதாகச் செயல் அலுவலர் பொன்னி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோயில் ஊழியர் ஹரி, அர்ச்சகர் செந்தில் உள்ளிட்டோர் வெள்ளிப் பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரையும் தேடி வருகின்றனர்.