ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கம்சட்காவின் கிழக்கு கடற்கரைக்கு அருகே 111 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 4ஆக பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்துச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 8 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இதே பகுதியில் ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.