முன்பு 4 வகைகளாக இருந்த ஜிஎஸ்டி வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவர்,
வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது என்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இந்தியாவின் 140 கோடி மக்கள் மீதும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
சில பொருட்களின் வரி பூஜ்ஜியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது என்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமைக் குறைந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.