சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி எம்.சுந்தரை, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி எம்.சுந்தரை, மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 11ஆம் தேதி பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து, நீதிபதி சுந்தரை, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 55ஆக குறைந்துள்ளது.