அத்தியாவசிய பொருட்களை, குறைந்த வரிப் பிரிவில் கொண்டு வந்திருப்பது நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் என ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் வர்த்தகம் மற்றும் தொழில் சங்கத்தின் கூட்டு மாநாட்டில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, அனைத்து ஆராய்ச்சி நிதிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றித் தெரிவித்து கொண்டார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாங்கும் கல்வி உபகரணப் பொருட்கள், வரி குறைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
காப்பீடு மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பதால் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் மோடியின் 2047 லட்சியத்திற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை, முக்கியமானதாக இருக்கும் எனக் காமகோடி தெரிவித்தார்.