சென்னை தாம்பரம் அருகே தண்ணீர் பிரச்னை தொடர்பாகப் பேசிய பட்டியலின ஊராட்சி மன்ற துணைத் தலைவரை திமுக எம்எல்ஏ ஒருமையில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முடிச்சூரில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட” முகாம் நடைபெற்றது. அப்போது முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயக மூர்த்தி, அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்னை தொடர்பாக எடுத்துரைத்தார்.
இதைக்கேட்ட திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அவரை வாயை மூடு எனத் திட்டினார். முன்னதாக முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர்கள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.