சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் பழமையான கார்கள், கேமராக்கள் உள்ளிட்டவற்றை பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் தொட்டுணர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
காரைக்குடியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பல ஆண்டுகளாக முயன்று பழமையான கார்கள், கேமராக்கள், கிராம போன்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்துள்ளார்.
இந்தப் பொருட்களை பொதுமக்களின் பார்வைக்காகப் பிள்ளையார்பட்டியில் கண்காட்சியாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தக் கண்காட்சியை திருப்பத்தூரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து பார்வையிட்டுத் தொட்டுணர்ந்து மகிழ்ந்தனர்.
இதற்கான செலவினங்களை லட்சுமணனே ஏற்றுக் கொண்ட நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.