மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பெண் பயிற்சி மருத்துவர்கள் குடுமிச் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அம்மாநிலத்தில் உள்ள ஷாதோலில், பிர்சா முண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பினை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள பிரசவ அறையில் நோயாளிகளின் மத்தியில் பயிற்சி பெண் மருத்துவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியது.
ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்து தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பயிற்சி மருத்துவர் ஷிவானி லாரியா என்பவர், தன்னை இரண்டு பயிற்சி மருத்துவர்கள் அடித்து, தலைமுடியை இழுத்து தரையில் தள்ளியதாகவும், ஆடைகளை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.