இங்கிலாந்தில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர், இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்தப் பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்தின் பேரில் 2 பேர்க் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டித்துள்ள இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர், சமீப காலமாக “இனவெறி” அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது எனவும் இது ஒரு தீவிர வன்முறைச் செயல் என்றும் கூறியுள்ளார்.