திருச்சி சிறுகனூர் அருகே நகைக்கடை வியாபாரிகள் மீது மிளகாய் பொடி தூவி 10 கிலோ ஆபரணத் தங்கம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை ஆர்.கே.ஜுவல்லரி மேலாளர் பிரதீப் ஷாட் என்பவர், திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க நகையுடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார்.
இரவு 11.30 மணியளவில் சிறுகனூர் அருகே சென்றபோது காரில் இருந்த ஊழியர்கள், இயற்கை உபாதை கழிப்பதற்காக கீழே இறங்கியபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி, காரில் இருந்த 10 கிலோ ஆபரண தங்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பாக நகைக்கடை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகள் அமைத்துத் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும், நகைக் கொள்ளையர்கள் திண்டுக்கல்லில் இருந்து பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்தார்களா அல்லது நகை கொள்ளையில் மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.