குஜராத் மாநிலம் பருச்சில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
பருச் மாவட்டம் பனோலியில் உள்ள சங்க்வி ஆர்கானிக்ஸ் என்ற தனியார் ரசாயன ஆலையில் திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன ஆலையில் பற்றிய தீயால் வானளவிற்குக் கரும்புகை எழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுக்கடங்காமல் பரவிய தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.