மற்றவரை விட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் அங்கு மோதல்கள் உருவாவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற மாநில அமைச்சர் பிரகலாத் சிங் படேல் எழுதிய புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடவுள் என்பவர் ஒருவரா அல்லது பலரா என்பதில் உலக மக்களிடையே மோதல் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
கடவுள் என்பவர் ஒருவரே என்று தத்துவ ஞானிகள் கூறுவதாகத் தெரிவித்த மோகன் பாகவத், அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை உலக மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மற்றவரை விட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் அங்கு மோதல்கள் உருவாவதாகத் தெரிவித்தார்.