பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது யார் என்று மக்களுக்குத் தெரியாதா? எனத் திமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் வெளியே வர மாட்டான், மக்களைச் சந்திக்க மாட்டான் என்று கதையாடல் செய்தவர்கள் எல்லாம் தற்போது புலம்பிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொள்கைக் கூப்பாடு போட்டு மக்களை ஏமாற்றிக் கொள்ளை அடிப்போர் யார் என்று மக்களுக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழகம் தாண்டி, தவெக உருவாக்கியுள்ள தன்னெழுச்சியான புத்தெழுச்சி அவர்களைக் குமுற வைத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.
மக்கள் விரும்பும் இயக்கம் எது வந்தாலும், அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்குப் புதிதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.