அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெனிசுலா மக்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சனை உள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபரானது முதல் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது.
அண்மையில் கரீபியன் கடலில் வெனிசுலாவைக் குறிவைத்து அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜேசன் தன்ஹம் எனும் போர்க்கப்பலை நிலைநிறுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்குப் பதிலடியாக அந்தப் போர்க்கப்பல் மீது எஃப் 16 ரகப் போர் விமானங்களை வெனிசுலா பறக்கச் செய்து மிரட்டியதால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில் பொதுமக்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்க வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்நாட்டு ராணுவ வீரர்கள், பொதுமக்களுக்குத் துப்பாக்கி சுடுதல் மற்றும் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க வெனிசுலாவும் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.