திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கார் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி வேன் புறப்பட்டுச் சென்றது.
கருமாரம்பாளையம் பகுதியைக் கடக்கும்போது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளனாது.
இதில், காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மது அருந்திவிட்டுப் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளிக்குக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.