சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் மின்மாற்றி வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மின்மாற்றிப் பெட்டி திறந்த நிலையில் உள்ளதால் சிறுவர்கள் விளையாடும்போது விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், உயர் அழுத்த மின்சாரக் கேபிள்கள் தாழ்வாகச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மின் அழுத்தத்தால் மின்மாற்றி வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி குடியிருப்பு வாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.