உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் - முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!
Aug 31, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விமானப்படையின் பிரம்மாஸ்திரமாக விளங்கும் ரஃபேல் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, விமானப்படையை அதிநவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அதிகச் செயல் திறன்கொண்ட ஜெட் என்ஜிகள் உள்ளிட்டவற்றை வாங்கவும், சுதர்சன் சக்ர வான் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிக்கவும் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான், விமானப்படையில் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ராணுவத்திற்குத் தேவையான அனைத்து ரஃபேல் விமானங்களும் வெளிநாட்டிடம் இருந்தான் வாங்கப்பட்டு வந்துள்ளன. இந்தமுறை, அந்த விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படை, பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 114 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தியில் இதுதான் மிகப்பெரிய உச்சமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேக் இன் இண்டியா திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இந்த ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 60 சதவீத்திற்கும் அதிகமான பங்கு இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கும்.

மேலும், ரஃபேல் விமானங்களின் எம்-88 என்ஜின்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கப் பணிகளுக்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆலை ஒன்றை அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரஃபேல் விமானங்கள் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியிருந்தன. இதனையடுத்தே, அந்த விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேற்கொண்டு 26 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், உள்நாட்டில் மேலும் 114 விமானங்கள் தயாரிக்கப்படும்பட்சத்தில், அவற்றின் மொத்த எண்ணிக்கை 176ஆக உயரும். அதன்மூலம், இந்திய விமானப்படையின் வலிமை ஈடுஇணையற்ற ஒன்றாக உருவெடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Tags: Rafale aircraft to be manufactured domestically - Indian Air Force submits proposalஉள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள்indian armyஇந்திய விமானப்படைரஃபேல் விமானங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்மாற்றி – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Next Post

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies