சீனாவின் ஷாங்காயில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள், சிம்பன்சி குட்டிக்குச் செல்போன் ரீல்ஸ்களை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் மிருகக் காட்சி சாலையில் டிங் டிங் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள சிம்பன்சி குட்டி ஒன்று உள்ளது.
அந்தக் குட்டியை காண வரும் பார்வையாளர்கள், அதனிடம் தனது செல்போன்களில் ரீல்ஸ்களைக் காண்பிப்பதை தொடர்ந்து செய்து வந்தனர்.
அந்த டிங் டிங் குட்டியும் இதனை கண்கொட்ட பார்ப்பதால், பார்வையாளர்கள் அதனை ரசிக்கத் தொடங்கினர்.
இதனால் சிம்பன்சி குட்டியின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், இதுபோன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள் என அதன் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.