திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் தொடர்பாகத் தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கட்டடங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது ஏறி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தென்னூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், விஜய் பிரச்சாரத்தின்போது தனது மரக்கடை மீது ஏறி ஆரவாரம் செய்த தவெகத் தொண்டர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்களைச் சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சேதமடைந்த பொருட்கள் மற்றும் திருட்டு போன பொருட்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தவெகத் திருச்சி மாவட்ட தலைவர் கரிகாலன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்யச் சோழன், இமயத்தமிழன், விக்னேஷ் குமார் மற்றும் மகளிர் அணி மாவட்ட தலைவி துளசி மணி ஆகியோர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.