எல்லையில் சீன ஊடுருவல்களை எதிர்த்ததற்காக இந்திய இராணுவத்தைப் பாராட்டிய திபெத்திய முன்னாள் பிரதமர் லோப்சாங் சங்கே, சீனாவின் விரிவாக்கக் கொள்கைகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா, திபெத்தைத் தனது உள்ளங்கையாகக் கருதி வருவதாகக் கூறிய சங்கே, லடாக், நேபாளம், பூட்டான், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை அதன் ஐந்து விரல்களாக எண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனர்கள் டோக்லாம், கால்வான், லடாக், சிக்கிம் மற்றும் பூட்டானில் ஊடுருவியுள்ளதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தைக் கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் சங்கே எச்சரித்துள்ளார்.