நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் எஸ்டேட் அருகே தடைச் செய்யப்பட்ட வான்வெளியில் விமானங்கள் தொடர்ந்து பறந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டிரம்பின் நெருங்கிய நண்பர்ச் சார்லஸ் கிர்க் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து டிரம்புக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது எஸ்டேட்டிற்கு மேல் தடைச் செய்யப்பட்ட பகுதியில் சம்பந்தமில்லாத விமானங்கள் பறந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நான்காவது முறையாக ஒரு விமானம் அங்கு பறந்து சென்ற போது நோராட் போர் விமானம் அதனை எச்சரித்து இடைமறித்தது.