வேலூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வேலூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரின் சத்துவாச்சாரி, வள்ளலார், பெருமுகை, காகிதபட்டறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதனால் சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் அதிகப்படியான நீர் புகுந்தும் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அதிலும், கொணவட்டம், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீரோடு மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
முறையான சாலை வசதி மற்றும் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளாததே மழை நீர் வீடுகளுக்குள் புகுவதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.