சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை முற்றுகையிட முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த ஆலையில் 13 மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆலையை முற்றுகையிடுவதற்காகச் சிப்காட் வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்ததால் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அருகிலுள்ள தாலுகா அலுவலகம் அழைத்துச் சென்ற மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், வருவாய்த்துறையினர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.