உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அப்போது, முத்துராமலிங்க தேவருக்குப் பாரத ரத்னா விருது வழங்க அமித்ஷாவிடம் அவர்க் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.