ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம், இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட்டை பேட்டிங் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்தார்.
இந்திய அணியின் மற்ற வீராங்கனைகளான பிரதீகா ராவல் நான்கு இடங்கள் முன்னேறி 42-வது இடமும், ஹர்லீன் தியோல் ஐந்து இடங்கள் முன்னேறி 43-வது இடமும் பிடித்தனர்.