75-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ஸ்ரீ சக்தி அம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ஸ்ரீ சக்தி அம்மா வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய நாட்டை சிறப்பான முறையில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி அன்னை ஸ்ரீ நாராயணி அருளைப் பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க ஆசிர்வதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.