பார்வை குறைபாட்டிற்கு SPECS அணிய வேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. EYE DROPS விட்டாலே போதும், பார்வையை மீட்டெடுக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் அமைந்துள்ள கண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மூலம் இது உறுதியாகி உள்ளது.
40 வயதைத் தொட்டவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவது இன்றைய காலத்தில் சகஜமாகிவிட, அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தோ, கண்ணாடி அணியச் செய்தோ மருத்துவர்கள் தீர்வளித்து வருகின்றனர்.
ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள EYE DROPS, மருத்துவதுறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை EYE DROPS செலுத்தி வந்தால் போதும். பார்வைக் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
DICLOFENOC – PILOCARPINE மருந்துகளின் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிசயச் சொட்டு மருந்து 766 நபர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களின் பார்வை நல்ல முன்னேற்றம கண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்தச் சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.