ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு இணங்கியுள்ளதாகக் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளின் தடைகள் கடுமையாக இல்லை என்றும் விமர்சித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் போன்ற நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன.