குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றிப் பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யா இயக்கி கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய குஷி படம் விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.