திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே பாலம் திறப்பு விழாவில் அமைச்சரை வரவேற்கக் குழந்தைள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டி.வலசை, சு.வாளவெட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் நடுவே துரிஞ்சல் ஆறு ஓடுகிறது. இதனால் மழைக்காலங்களில் மக்கள் போக்குவரத்துக்கு அதிகச் சிரமம் ஏற்படுவதால், உயர்மட்ட பாலம் அமைத்துத் தர கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இரு கிராமங்களை இணைக்கும் வகையில் 80 மீட்டர் நீளத்திற்குப் பாலம் அமைக்கப்பட்டது.
புதிய பாலம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், அமைச்சர் எ.வ.வேலு-வை வரவேற்பதற்காகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.