ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
நெல்லூர் மாவட்டம் பெரமனா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் மீது, மணல் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.
மேலும், டிப்பர் லாரி காரை பின்னோக்கி இழுத்துச் சென்றத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தேசிய நெடுஞ்சாலையில் தவறாக எதிர் திசையில் டிப்பர் லாரி வந்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது. மேலும், காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.