பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எலான் மஸ்க் பேசியதற்கு அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் புலப்பெயர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி ஆதரவாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் பிரமாண்ட பேரணி நடத்தினர். வெளிநாட்டவர்கள் அதிகளவில் குடியேறுவதால் பிரிட்டன் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது.
வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற அது கலவரமாக வெடித்தது.
இதனிடையே பேரணியில் பங்கேற்றவர்களுடன் வீடியோவில் உரையாற்றிய எலான் மஸ்க், பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
எலான் மஸ்கின் இந்தப் பேச்சுக்கு பிரட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் இறையாண்மைக்கு எதிரான எலான் மஸ்க்கின் பேச்சு ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கிற்கும் பிரிட்டன் அரசாங்கத்திற்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், அவரது நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுமா என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஆனால், இதுவரை அப்படியொரு திட்டம் இல்லை என்றே பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.