கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது என்றும், கதை மற்றும் கதாப்பாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
ராஜ்கமல், ரெட் ஜெண்ட் சேர்ந்து ஒரு படம் பண்ண போகிறோம். இன்னும் டைரக்டர் முடிவாகவில்லை. கமலும் நானும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை. இதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம் என்று அவர் கூறினார். பிரதமர் மோடிக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.