ஒரு பெரிய பாத்திரத்தில் வட இந்திய உணவு வகையான “தால் மக்கானி”, ஜேசிபி இயந்திரம் கொண்டு கலக்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடஇந்தியாவின் பிரபலமான உணவு வகையான தால் மக்கானி, பெரும்பாலும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின்போது வழங்கப்படும் விருந்துகளில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு பெரிய பாத்திரத்தில், தால் மக்கானி சமைக்கப்படுவது போன்ற காட்சி வெளியாகி பலதரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகக் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜேசிபி இயந்திரம், தற்போது சமையல் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுவது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து ஒருபுறம் நகைச்சுவையான விமர்சனங்கள் எழுந்தாலும், மற்றொருபுறம் இது சுகாதார ரீதியான கவலைகளையும் எழுப்பியுள்ளது.
குறிப்பாக “இங்கு தால் மக்கானி வாங்கினால், ஆயில் மற்றும் கிரீஸ் இலவசம்” எனச் சமூக வலைதளப் பயனர் ஒருவர்ச் செய்துள்ள கமெண்ட் அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது.