நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடைத் திரைப்படத்தின் என் பாட்டன் சாமி பாடல் வெளியாகியுள்ளது.
இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 1ம் தேதி வெளியாக உள்ளது.
இதில், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ‘என் பாட்டன் சாமி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.