சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பட்ஜெட், துறை மானிய கோரிக்கைகள் விவாதத்தின்போது, அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கபடுவது வழக்கம்.
2021-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, சுமார் 8 ஆயிரத்து 634 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 4 ஆயிரத்து 516 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் 256 அறிவிப்புகளை செயல்படுத்த சாத்திமில்லை என்பதால், அவற்றை கைவிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவை தவிர, அரசாணை மற்றும் நிர்வாக உத்தரவுகளுக்காக 381 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.