நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைக் கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காந்தி ராஜன், நெல்லை மாநகரக் காவல்துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் இரவு பணியை முடித்துவிட்டுச் சுத்தமல்லியில் உள்ள தனது வீட்டிற்குக் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காவலர் காந்திராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த காவலர் காந்திராஜன், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது காரை ஏற்றினார்.