கன்னியாகுமரி அருகே வாட்ஸ்அப் காலில் காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்கில் தொங்கியதால் கழுத்தில் துணி இறுக்கி இளைஞர் உயிரிழந்தார்.
இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெய்சங்கரன் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது காதலியுடன் வாட்ஸ்அப் காலில் பேசியுள்ளார். அப்போது அவர் விளையாட்டாக வீட்டில் போர்வையால் தூக்குப்போட்டுத் தொங்கியபடி விளையாடியுள்ளார். அப்போது போர்வை கழுத்தில் இறுக்கியதால் ஜெய்சங்கரன் உயிரிழந்தார்.