பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!
Nov 8, 2025, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் தான் பயங்கரவாதத்துக்கு முழு ஆதரவளித்து வருகிறார் என்ற உண்மையை ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதியே கூறியிருப்பது இருப்பது, இந்தியாவின் குற்றச்சாட்டை உண்மை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது இடங்களையும் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாத பயிற்சி முகாம்களையும் துல்லியமாக இந்தியா தாக்கி அழித்தது. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகிய பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் அரசு மரியாதையுடன் பலத்த பாதுகாப்புடன் நடந்தன. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது ஃபர்கான், பாகிஸ்தான் பஞ்சாப் எம்எல்ஏ உஸ்மான் அன்வர் மற்றும் பல இராணுவ அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹபீஸ் அப்துர் ரவூப்பும் பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

ஏற்கெனவே, இந்தப் புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், இதே புகைப்படத்தைக் காட்டி பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு அளிக்கிறது என்ற இந்தியாவின் தொடர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக இந்தப் புகைப்படம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ​​ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்மீரி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் தான், இராணுவ அதிகாரிகளைப் பயங்கரவாதிகளின் இறுதி சடங்குக்குச் செல்ல உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை, கைபர்  பக்துன்க்வாவில் நடைபெற்ற 38வது ஆண்டு மிஷன் முஸ்தபா மாநாட்டில், பேசிய இலியாஸ் கஷ்மீரி, அசிம் முனீரும் பாகிஸ்தான் இராணுவமும் ஜிகாதிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துவருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அசிம் முனீர் இராணுவ மரியாதை  செலுத்தியதை உறுதிப்படுத்திய பயங்கரவாதி இலியாஸ் கஷ்மீரி, பலியான பயங்கரவாதிகளின் இறுதிசடங்கை அரசு மரியாதையுடன் நடப்பதற்கு அசிம் முனீர் உத்தரவிட்டார் என்றும் , பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளையும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஆணை  பிறப்பித்தார் என்றும், இறுதி சடங்குக்கு ராணுவப் பாதுகாப்பும் அளித்தார் என்றும் பொதுமேடையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த மும்பை தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் மசூத் அசார் இருந்தார் என்பதையும் வெளிப்படையாக இலியாஸ் கஷ்மீரி உறுதி செய்துள்ளார். இதேபோல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி, சைபுல்லா கசூரி பேசிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரின் போது தரைமட்டமாக்கப்பட்ட முரிட்கே பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்கப் பாகிஸ்தான் அரசும், இராணுவமும் நிதியுதவி செய்துள்ளதாக அப்பட்டமாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்தே ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதை இந்தியா மீண்டும் மீண்டும் ஆதாரத்துடன் சர்வதேச அரங்கில் நிரூபித்து வருகிறது.

இப்போது,ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயங்கரவாதிகளே, தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் தான் உதவுகிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர்Pakistan terrorists approved: Asim Munir fully supports Jaish-e-Mohammedஜெய்ஸ்-இ-முகமதுஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைpakistanபாகிஸ்தான்அசிம் முனீர்pakistan news today
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்!

Next Post

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

Related News

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies